உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது ஓட்ஸ். அதையே தினமும் சாப்பிட்டு அலுத்துக் கொள்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் ஓட்ஸுடன் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துகளை நிறைவாகக் கொண்டுள்ள கொய்யாப்பழம் சேர்த்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
ஓட்ஸ் – ஒரு கப்
தேன் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – அரை கப்
கொய்யாப்பழம் (நறுக்கியது) – அரை கப்
எப்படிச் செய்வது?
ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்பு ஆறவிட்டு அதில் தேன், மற்றும் கொய்யாப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…