கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் பிஸ்கட்
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி செய்ய வேண்டும் நினைப்பவர்களுக்கு இந்த ஓட்ஸ் பிஸ்கட் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். உடல் பருமன், இதயநோய் மற்றும் நீரிழிவு உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இது அமையும்.
என்ன தேவை?
ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் – தலா ஒரு கப்
ஓட்ஸ் – கால் கப் (மாவு போன்று திரிக்கவும்)
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன்
தேன் – அரை கப்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – கால் கப்
எப்படிச் செய்வது?
`அவனை’ 180 டிகிரி செல்ஷியஸில் ப்ரீஹீட் செய்யவும். உலர் திராட்சை தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பின்னர் அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதுதான் பிஸ்கட் கலவை.
பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை சரிசமமாக விரிக்கவும். பிஸ்கட் கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரை இன்ச் இடைவெளிகளில் பட்டர் பேப்பர்மீது பிஸ்கட்டுகளாக ஊற்றவும். பின்னர் 15 நிமிடங்கள் `பேக்’ செய்யவும். அவனில் இருந்து வெளியே எடுத்து 10 நிமிடங்கள் ஆறவைத்துச் சுவைக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!
“என்னது ரேஷன்ல கோதுமை பீரா?”: அப்டேட் குமாரு