திங்கட்கிழமை… சமையலறைக்குச் செல்லாமல் என்ன செய்து சாப்பிடலாம் என்று யோசிப்பவர்கள் இந்த கொட்டை பழக்கலவை செய்து இந்த நாளை சிறப்பாக வரவேற்கலாம். இதில் ஒமேகா – 3, இரும்புச்சத்து, வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.
என்ன தேவை?
அக்ரூட் – ஒரு பிடி
பாதாம் – 10
பேரீச்சம்பழம் – 4
அத்திப்பழம் – 2
எப்படிச் செய்வது?
அக்ரூட் மற்றும் பாதாம் பருப்பு ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறு துண்டுகளாக்கிய பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
70 மணி நேரமா… டைவர்ஸ் கன்பார்ம் : அப்டேட் குமாரு
ODI World Cup 2023: 6வது வெற்றி.. தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!