கிச்சன் கீர்த்தனா : நவதானிய சுண்டல்

Published On:

| By christopher

Kitchen Keerthana : Navadaniya Sundal
சுண்டல் இல்லாத நவராத்திரி பண்டிகையா? வீக் எண்ட் ஸ்பெஷலாக நவதானிய சுண்டல் செய்து இந்த நவராத்திரி திருநாளைக் கொண்டாடுங்கள்.

என்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை, வெள்ளை கொண்டைக்கடலை, ராஜ்மா, பாசிப்பயறு, கொள்ளு, பட்டாணி, முழு கறுப்பு உளுந்து, வெள்ளை காராமணி, சிவப்பு காராமணி – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க…
தனியா (மல்லி) – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2.

எப்படிச் செய்வது?

பயறு வகைகளை நன்றாக கழுவி போதுமான நீரில் பத்து மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை கழுவி குக்கரில் ஏழு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியை லேசாக சூடாக்கி கடலைப்பருப்பு, தனியா (மல்லி) மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துருவிய இஞ்சி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வெந்த கலவையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். அதோடு தேவையான அளவு உப்பு மற்றும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்துக் கலந்து தேங்காய்த்துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மறுபடியும் தாத்தா வாராறா? – அப்டேட் குமாரு

துணை முதல்வரான பின்பு கையெழுத்திட்ட முதல் கோப்பு… உதயநிதி நெகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel