சாதா தோசை, கல் தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை, நெய் தோசை, பட்டர் தோசை, பனீர் தோசை, பொடி தோசை, பேப்பர் ரோஸ்ட்… இன்னும் இன்னும் பல தோசை வகைகள் வரிசை கட்ட… வீட்டிலேயே மட்டன் தோசை செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
தோசை மாவு – அரை கிலோ
எலும்பில்லாத மட்டன் – கால் கிலோ
முட்டை – 5
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கலைஞர் கனவு இல்லம்… அதிகாரிகள் ஆட்டம்… கசப்பில் திமுகவினர்!
போட்டோ ஷூட்டுக்கு ரெடியா? – அப்டேட் குமாரு