விநாயகர் சதுர்த்தி முடிந்து அடுத்த வாரம் புரட்டாசி பிறந்துவிடும். ‘அடுத்து ஒரு மாதம் முழுக்க வீட்டில் அசைவ உணவுகளைச் சாப்பிட முடியாது… அதற்காக இந்த வாரம் முழுக்க ஒருபிடி பிடித்துவிட வேண்டியதுதான்’ என்று நினைப்பவர்கள் பலருண்டு. அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த மட்டன் கொத்துக்கறி.
என்ன தேவை?
கொத்துக்கறி – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 4
மஞ்சள்தூள் – சிறிதளவு
பூண்டு – 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!
அரைச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா – அப்டேட் குமாரு