இந்த வீக் எண்டில் என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்த நவதானிய கட்லெட் செய்து அசத்தலாம். நவதானியங்களில் ஒன்பது விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.
என்ன தேவை?
கேரட் – 2 (வேகவைத்து, மசித்துக்கொள்ளவும்)
நவதானியக் கலவை – ஒரு கப்
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்ந்தது – ஒரு டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) தூள் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தானியங்களை ஐந்து மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன், மிளகாய் விழுது, உப்பு உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்துப் பிசைந்து, கட்லெட் போல தட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி இதைப் போட்டு, இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானவுடன் இறக்கவும். தக்காளிச் சட்னியுடன் பரிமாறலாம்.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு
புகைமண்டலமான நெல்லை: 2 நாட்களாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!