விநாயகருக்கு இந்த முறை என்ன படைப்பது என்கிற கேள்வி சதுர்த்தியின்போது ரொம்பவே கவனம் பெறும். மற்ற நாட்களை போலல்லாமல், கொஞ்சம் ரிச்சான சமையலே பெரும்பாலும் பண்டிகையின்போது பலரது சாய்ஸாகவும் இருக்கும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று அசத்த எளிமையாகச் செய்யக்கூடிய இந்த பால் அல்வா உதவும்.
என்ன தேவை?
பால் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
ரவை – கால் கப்
நெய் – அரை கப்
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை மற்றும் கால் கப் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை வெந்து கெட்டியாகும்போது மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். கலவை நன்கு கெட்டியாகி திரண்டு வரும்போது கடைசியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒட்டாமல் வரும் வரை துருவிய பாதாம் பிஸ்தா சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதன் சூட்டிலேயே மேலும் சில நிமிடங்கள் வைத்து நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். தித்திப்பான பால் அல்வா தயார்.
குறிப்பு: பாலை காய்ச்சாமல் அப்படியே சேர்க்க லாம். ரவையையும் வறுக்க வேண்டாம்.
டிஜிட்டல் திண்ணை: நெரிசல், ஊழல்… ஆன் லைன் புகார்கள்! ரகுமான் மீது வழக்கு?
விழுப்புரம் அதிமுக ஆர்ப்பாட்டம் எதற்காக?