இட்லி என்றாலே ஓட்டம் பிடிக்கும் குழந்தைகள், தோசை என்றால் மூன்று வேளைக்கும் அதைச் சாப்பிடத் தயாராக இருப்பார்கள். சைவத்தில் விருந்தே வைக்கும் அளவுக்கு வெரைட்டியான தோசைகள் இருக்க… அசைவத்தில் வித்தியாசமான, சுவையான இந்த மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம் செய்து வீட்டிலுள்ள அனைவரையும் அசத்தலாம்.
என்ன தேவை?
தோசை மாவு – அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று
பொடியாய நறுக்கிய கேரட்- 2
சிக்கன் -200 கிராம்
இட்லிப் பொடி- 2 டேபிள்ஸ்பூன்
சீஸ்- 25 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? – அப்டேட் குமாரு