கோடைக்கேற்ப நம் பழக்கவழக்கங்கள், உணவு முறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதிக சிரமமின்றி கோடையை எளிதில் கடந்துவிடலாம். உதாரணத்துக்கு, முளைகட்டிய வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு நிலைகள் மேம்படும். ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து சமநிலைப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் முளைகட்டிய வெந்தயத்தில் தோசை செய்து சாப்பிட்டு, இந்தக் கோடையை இதமாக்குங்கள்.
என்ன தேவை?
முளைகட்டிய வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாசுமதி அரிசி (அ) புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 2 (கீறிக்கொள்ளவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, முளைகட்டிய வெந்தயம் சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மல்லித்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, 2 ஆழாக்கு நீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்துக் கலந்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை ‘சிம்’மில் 10 நிமிடம் வைத்து திறந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வாழைப்பழ மில்க் ஷேக்
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி