பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் சில ரெசிப்பிக்களை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இந்த மருந்து சாதம் உதவும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நல்ல பலனைத் தரும்.
என்ன தேவை?
சுக்கு – ஒரு துண்டு
வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன்,
திப்பிலி – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
(இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும்)
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு
கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதெல்லாம் நமக்கு தேவையா கோபி… அப்டேட் குமாரு