இந்த வீக் எண்டில் என்ன செய்து அசத்தலாம் என்று யோசிப்பவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இந்த லெமன் அவல். அவலில் உள்ள இரும்புச்சத்து, அனீமியா வருவதைத் தடுக்கும். கால்சியம், ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பார்வைத் திறனை மேம்படுத்தும்.
என்ன தேவை?
கெட்டி அவல் (வெள்ளை) – 100 கிராம்
பெரிய எலுமிச்சைப் பழம் – ஒன்று
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கேரட், பீன்ஸ் (பொடியாக நறுக்கப்பட்டது) – அரை கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
வறுத்த வேர்க்கடலை – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழியவும். அவலுடன் சிறிதளவு சூடான தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிக் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கவும். பிறகு, அவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து எலுமிச்சைச் சாறு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி, வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சிலப்பதிகாரம் முதல் மாத்திரை சைடு எஃபெக்ட் வரை… டிஐஜி விஜயகுமாரின் செல்போன் சொன்ன தகவல்கள்!