leen and lite salt

கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்  

தமிழகம்

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த லீன் அன்ட் லைட் சாலட். கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும் வயிறு நிரம்பும். கொழுப்புச் சத்து மிகவும் குறைவு.  இதை காலை நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடையை விரைவில் குறைத்துவிடலாம்.

என்ன தேவை?

கீரை – 150 கிராம்
முளைகட்டிய சிறு பயறு – 50 கிராம்
தக்காளி – 30 கிராம்
வினிகர் – 5 மில்லி
ஆலிவ் எண்ணெய் – 15 மில்லி
மிளகுத்தூள் – 10 கிராம்
வெங்காயம் – 25 கிராம்
குடமிளகாய் – இரண்டு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தக்காளி, குடமிளகாய், வெங்காயம், கீரை ஆகியவற்றை நறுக்கிவைத்துக் கொள்ளவும். அதனோடு, முளைகட்டிய பயறு சேர்த்து, ஆலிவ் எண்ணெய், வினிகர், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்பு, அதன் மேல் கொத்தமல்லியை நறுக்கித் தூவிப் பரிமாறலாம்.

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கேள்வி நேரத்துக்கு செக்!

சனாதனம் பத்தி சனாகிட்ட பேட்டி: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *