கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி

Published On:

| By Selvam

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல், உடல்வலி, சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் ஆற்றல் கொள்ளுவுக்கு உண்டு. அப்படிப்பட்ட கொள்ளுவில் இட்லி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

என்ன தேவை?

கொள்ளு – ஒரு கப்
இட்லி அரிசி – 3 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
சமையல் சோடா – சிறிதளவு

எப்படிச் செய்வது?

கொள்ளு மற்றும் இட்லி அரிசியை சுமார் 5 – 6 மணி நேரம் தனித்தனியாக கழுவி ஊறவைக்கவும். அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைத்த அரிசியில் வெந்தயம் சேர்க்கவும். கொள்ளுவைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி, மென்மையாக அரைக்கவும். இப்போது அரிசியை வடிகட்டி மென்மையாக அரைக்கவும்.

இதில் உப்பு மற்றும் கொள்ளு கலவையைச் சேர்க்கவும். கைகளைப் பயன்படுத்தி நன்கு கலந்து, சுமார் 6 – 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு, சமையல் சோடா மற்றும் தேவையான நீரைச் சேர்த்து கலக்கவும்.

மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லி குக்கருக்குள் வைத்து, சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். ஆரோக்கியமான கொள்ளு இட்லி தயார். சட்னி மற்றும் சாம்பாரு டன் சூடாகப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மால்டாவில் நடந்தது என்ன?

’கஞ்சா அடிச்சா அரெஸ்ட் பண்ணுவாங்கனு தெரியாதா?’ : சிறை சென்ற மகன்… மன்சூர் அலிகான் அறிவுரை!