கிச்சன் கீர்த்தனா: கீரை கட்லெட்

Published On:

| By Selvam

ஓய்வின்மையும், தூக்கம் போதாமையும் கண்களை வெகுவாகப் பாதிக்கின்றன. எட்டு மணி நேரத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். தினசரி உடற்பயிற்சி கட்டாயம்.

மேலும், கண்களைப் பாதுகாப்பதற்கான டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம். அதற்கு இந்த கீரை கட்லெட் உதவும். வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பியாகவும் அமையும்.  இதை ஒரு ஸ்டார்ட்டர் டிஷ்ஷாக எடுத்துக்கொள்ளலாம்.

என்ன தேவை?

உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது)
பச்சைப் பட்டாணி – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பாலக்கீரை அல்லது ஏதாவது கீரை – ஒரு கைப்பிடி அளவு
கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் – 200 கிராம்
அரிசி மாவு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சமையல் எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

காய்கறிகள், கீரை, பச்சைப் பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் கரம் மசாலாத்தூள் கலந்துகொள்ளவும். 50 கிராம் பிரெட் கிரம்ஸை இதில் கலக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து, அதில் உப்பு போட்டு உருண்டை பிடித்து, பிறகு கட்லெட்டாகத் தட்டிக்கொள்ளவும்.

தவாவை சூடாக்கி சமையல் எண்ணெயை விட்டுக் கொள்ளவும். ஒரு கட்லெட்டுக்கு கால் டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள பிரெட் கிரம்ஸ், அரிசி மாவு பேஸ்ட் இரண்டையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவும். முதலில் பேஸ்ட்டிலும் அடுத்து பிரெட் கிரம்ஸிலும் கட்லெட்டின் இரண்டு பக்கங்களையும் தோய்த்தெடுத்து பிறகு கட்லெட்டை வாணலியில் வைக்கவும். நன்கு பொன்னிறமாகச் சுட்டெடுத்துக் கொண்டபின் சூடாக அவற்றைப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரு நாள் கூட லீவு இல்ல… அப்டேட் குமாரு

“தமிழக பக்தர்களுக்கான ஏற்பாடு” : மலையாளத்தில் சம்சாரிச்ச அமைச்சர் சேகர் பாபு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share