இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் அன்றாடம் உண்ணப்படும் வெவ்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் கஸூரி மேத்தி எனப்படும் உலர்ந்த வெந்தயக்கீரை. உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் கஸூரி மேத்தியைச் சேர்த்து கட்லெட் செய்தும் சுவைக்கலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மைதா – அரை கிலோ
முழு மிளகு – 20 கிராம்
முழு தனியா – 20 கிராம்
வனஸ்பதி – 100 கிராம்
கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை) – 20 கிராம்
உப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதாவுடன் மிளகு, மல்லி,கஸூரி மேத்தி, வனஸ்பதி மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சிறிய தட்டைகளாக தட்டிப் போட்டுப் பொரித்து எடுத்தால், சுவையான கஸூரி மேத்தி கட்லெட் ரெடி.