கிச்சன் கீர்த்தனா : காஷ்மீரி ஆலூ

Published On:

| By christopher

kitchen keerthana kashmiri aalu

நட்சத்திர ஹோட்டல் பஃபே மெனுவில் அசைவ உணவுகளுக்கு நிகராக இடம்பிடிக்கும் ஸ்பெஷல் அயிட்டம் காஷ்மீரி ஆலூ. இதை உங்கள் வீட்டிலேயே சமைத்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும். kitchen keerthana kashmiri aalu

என்ன தேவை? kitchen keerthana kashmiri aalu

உருளைக்கிழங்கு – கால் கிலோ
வெங்காயம் (பொடியாக நறுக்கியது), தக்காளி (அரைத்தது) – தலா அரை கப்
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு  

எப்படிச் செய்வது? kitchen keerthana kashmiri aalu

உருளைக்கிழங்கை வேக வைத்து,   தோல் நீக்கி, ‘கட்’ செய்து, பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் சேர்க்கவும். பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் அரைத்த தக்காளி சேர்த்து நன்றாக எண்ணெய் மிதக்கும்வரை வதக்கி, பின்னர் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share