மழைக்காலத்தில் சளிப் பிடிப்பது இயற்கையானதுதான் என்கிற நிலையில் அதை தீர்க்க மருந்துக்கடைகளுக்குச் செல்லாமல்… வீட்டிலேயே சளியை விரட்ட உதவும் இந்த கற்பூரவல்லி கஷாயம்.
என்ன தேவை?
கற்பூரவல்லி இலை – 5
துளசி இலை – 10
இஞ்சி – அரை அங்குலத்துண்டு (கழுவி, தோல் நீக்கி தட்டியது)
சுக்குப்பொடி, ஓமம் – தலா அரை டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
எப்படிச் செய்வது?
பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து சூடாக்கி, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அவை ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். இத்துடன் பொடித்த பனங்கற்கண்டு சேர்த்து கரைந்ததும் குடிக்கவும். நல்ல மணத்துடன் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை என்னும் பொண்டாட்டி: அப்டேட் குமாரு
விஷ்ணு விஷால் அமீர்கானுக்கு உதவிய அஜித்