சிறுதானிய உணவு உடலுக்கு நல்லதுன்னு சொன்னா, இதைச் சாப்பிட்டா மூட்டு வலி சரியாகுமா, சர்க்கரை நோய் குணமாகுன்னு கேட்கிறாங்களே தவிர… இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடணும்னு பலருக்கும் தோன்றுவதேயில்லை. இந்த நிலையில் சிறுதானிய உணவை வியாதிக்கு மருந்தாகப் பார்ப்பதை விட்டுட்டு அதையெல்லாம் நம்ம தினசரி உணவுல சேர்த்துக்கிட்டாலே போதும்… அதுக்கு இந்த கம்பு அவல் மிக்சர் உதவும்.
என்ன தேவை?
கம்பு அவல் – ஒரு கப்
பொட்டுக்கடலை – கால் கப்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 15
உலர்திராட்சை – 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். வலையுள்ள எவர்சில்வர் வடிகட்டியில் பொட்டுக்கடலையை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். இதேபோல முந்திரி, வேர்க்கடலை, உலர்திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும், இறுதியாக கம்பு அவலை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடிய டிஷ்யூ பேப்பரில் போடவும். அகலமான தட்டில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் கம்பு அவல் மிக்சர் ரெடி.
குறிப்பு: கம்பு அவலை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக மைக்ரோவேவ் அவனிலும் பொரித்தெடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!