மாவுச்சத்து அதிகம் உள்ள உருளைக்கிழங்கு உடலுக்கு தேவையான கலோரிகளை உடனடியாக வழங்கும் தன்மையுடையது. அப்படிப்பட்ட உருளைக்கிழங்குடன் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்த்து சுவையான மிக்ஸ்டு வெஜிடபுள் போண்டா செய்து அசத்தலாம். சிறந்த மாலை நேர ஸ்நாக்ஸாக இது அமையும்.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 50 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட் – 100 கிராம்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 100 கிராம்
ஃப்ரெஷ் பச்சைப்பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
போண்டா மாவு மிக்ஸ் செய்ய…
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையானஅளவு
மிளகாய்த்தூள் – தேவையானஅளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காய்களை உப்பு போட்டு வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையைச் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் மசித்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவை ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து, கலக்கி வைத்த போண்டா மிக்ஸில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: போண்டா மாவு மிக்ஸ் செய்யும்போது மாவின் பதம் மிகவும் நீர்த்தோ, கெட்டியாகவோ இருக்கக் கூடாது. தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
தென்னை: தொழில்நுட்ப படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!
ரூ.190 கோடியில் உட்புறச் சாலைகளைச் சீரமைக்கும் சென்னை மாநகராட்சி!