இயற்கையிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த நோய் நிவாரணி வேப்பங்கொழுந்து. ஆனால், வேப்பங்கொழுந்து என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வெறுப்பார்கள். அந்த வேப்பங்கொழுந்தில் எள் மற்றும் கருப்பட்டி சேர்த்து, இந்த ஹெல்த்தி உருண்டை செய்து கொடுங்கள். உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஐந்து உருண்டைகள் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொல்லைகள் நீங்கும்.
என்ன தேவை?
எள் – கால் கிலோ
கருப்பட்டி – கால் கிலோ (நொறுக்கிக் கொள்ளவும்)
வேப்பங்கொழுந்து – 6 இலை
பொரிகடலை – 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 50 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
எள்ளை வெறும் வாணலியில் படபடவென வெடிக்கும்வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும். ஆற வைத்த எள், கருப்பட்டி, பொரிகடலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். விரல்களில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு அரைத்தவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைத்தால், ஹெல்த்தி உருண்டை ரெடி.
இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: காயின் பாலிடிக்ஸ்… ராஜ்நாத் விசிட்டின் ராஜ்யசபா ரகசியம்!