கிச்சன் கீர்த்தனா : குஜராத் ஹோலி லட்டு

Published On:

| By christopher

Gujarat Holi Lattu

வண்ணங்களால் கோலாகலமாகும் ஹோலிப் பண்டிகையின்போது கிருஷ்ணருக்கு ஹோலி (குஜராத் பேஷன் லட்டு) லட்டுகளை வட இந்தியர்கள் படைத்துக் கொண்டாடுவர்.  இந்த மார்ச் மாதம் 25-ம் தேதி வரும் ஹோலி பண்டிகைக்கு முன்பாகவே இந்த லட்டை செய்து இந்த வீக் எண்டைக் கொண்டாடுங்களேன்..

என்ன தேவை?

கடலை மாவு – 2 கப்
நெய் – அரை கப்
பொடித்த சர்க்கரை – ஒன்றரை கப்
உடைத்த முந்திரி – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
அலங்கரிக்க…
உடைத்து வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்தெடுத்து வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கைவிடாமல் கறுகாமல் வறுக்கவும். இதில் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பிறகு உப்பு போட்டுக் கலந்து சிறிது ஆறியதும் சர்க்கரைத்தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும். மேலே முந்திரி, திராட்சையால் அலங்கரித்துப் பரிமாறவும். மாவு சிறிது சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அஞ்சு சால்வை…மூணு பொக்கே: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்… ஸ்டாலின் முடிவு? சீனியர்கள் ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share