மழைக்காலத்தில் ஏற்படும் பித்தம், மூட்டுவலி, சளி, இருமலை போக்கும் இஞ்சிப் பச்சடி, பசியைத் தூண்டும் சக்தியையும் கொண்டது. குளிர்காலத்துக்கு ஏற்ற எளிதாகச் செய்யக்கூடிய இந்தப் பச்சடி அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
இஞ்சி – 100 கிராம்
புளி – சிறிதளவு
எலுமிச்சை – 4
பெரிய வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…