இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில் வீட்டிலுள்ளவர்களின் அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த எனர்ஜி பால்ஸ் செய்து கொடுக்கலாம். இது 2 முதல் 4 நாட்கள் நன்றாக இருக்கும். kitchen keerthana energy balls
என்ன தேவை? kitchen keerthana energy balls
வறுத்த பாதாம்பருப்பு – 120 கிராம்
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்
ஃபிளாக்ஸ் சீட்ஸ் (ஆளிவிதை) – அரை கப்
ஒட்ஸ் – 100 கிராம் (உடையாமல் லேசாக வறுக்கவும்)
வறுத்த எள் – கால் கப் (பொடிக்கவும்)
வால்நட் – 50 கிராம் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)
தேன் – அரை கப் அல்லது தேவையான அளவு
ஜாதிக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
பாதாமை ஒன்றிரண்டாகப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போடவும். இத்துடன் பேரீச்சம்பழத்தையும் பொடித்துப் போடவும் ஃபிளக்ஸ் சீட்ஸை வெறும் கடாயில் வறுத்து கொரகொரப்பாகப் பொடித்து சேர்த்து, பொடித்த எள், உப்பு சேர்க்கவும். வால் நட்டையும் வறுத்து சேர்க்கவும். வறுத்த ஓட்ஸை இந்தக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, கடைசியாக தேன் சேர்த்துக் கலந்து விருப்பமான அளவில் உருண்டைகளாக உருட்டிப் பரிமாறவும்.