காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும்… வாரத்தின் முதல் வேலை நாளை இன்று, காலை உணவைத் தவிர்த்தே வருகிறோம்.
நாம் உயிர் வாழ, நம் உடல் இயங்கத் தேவையான சக்தியைத் தருவது உணவு. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவில், அனைத்து ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு எளிதாகச் செய்யக்கூடிய இந்த முட்டைப் பணியாரம் உதவும்.
என்ன தேவை?
முட்டை – ஒன்று
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வெங்காயம் மற்றும் தக்காளியைச் சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். முட்டையை உடைத்து அதில் சேர்க்கவும். பிறகு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். ஒன்றிணையும் வரை நன்றாகக் கலக்கவும்.
நான்-ஸ்டிக் பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் எண்ணெய் சேர்க்கவும். முட்டைக் கலவையை குழிகளில் ஊற்றவும். நடுத்தர தீயில் 2 – 3 நிமிடங்கள் எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக மாறும்வரை ஒரு நிமிடம் வேகவிடவும். சுவையான முட்டைப் பணியாரம் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல்லாம் வீட்டுல எடுபடாது போல : அப்டேட் குமாரு
பேய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?