கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
மாலை நேரத்துக்கு இதமாக சூடாக, கரகர, மொறுமொறுவென எதையாவது எதிர்பார்க்கும் வயிற்றையும் மனதையும் ‘ஓவர் தீனி உடம்புக்கு ஆகாது… நொறுக்குத்தீனியெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல…’ என்று சமாதானம் சொல்லி அடக்குகிறீர்களா? எல்லா நொறுக்குத்தீனிகளும் ஆரோக்கியமற்றவை என்று யார் சொன்னது? அவற்றையே ஆரோக்கிய வெர்ஷனில் மாற்றி உங்கள் வயிற்றையும் மனதையும் குளிரச் செய்ய இந்த குக்கீஸ் உதவும்.
என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
பொடித்த ஓட்ஸ் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
துருவிய வெல்லம் – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உலர்திராட்சை, நறுக்கிய பாதாம், முந்திரி, மாவு கலவை சேர்த்துக் கலக்கவும். சுத்தமான சமையல் மேடையில் நெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, கனமான சப்பாத்தியாகத் தேய்க்கவும். பிறகு, குக்கி கட்டர் கொண்டு துண்டுகளாக்கவும் (கத்தி கொண்டும் செய்யலாம்). 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஓரங்கள் லேசாக பழுப்பு நிறமானதும் எடுக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு மீண்டும் 2 – 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறிய பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அண்ணாமலையின் பொய்க்கால் ஆட்டத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்”…. விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
மீண்டும் திருமணமா? – அமீர் கான் சொன்ன பதில்!