வீட்டுக்கு வரும் திடீர் விருந்தினர்களுக்கு உடனே என்ன செய்து கொடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்குக் கைகொடுக்கும் டிஷ் இந்த பேரீச்சம்பழம் கேரட் சாலட். பார்ட்டிகளுக்கும் உகந்தது. பார்க்க அழகாகவும், சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 கப்
நீளமாக துருவிய கேரட் – 2 கப்
நீளமாக உரித்த ஆரஞ்சு சுளைகள் – 2 கப்
க்ரீம் சீஸ் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் – அரை கப்
லெட்யூஸ் இலைகள் – 6
ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்
எப்படிச் செய்வது?
முதலில் க்ரீம் சீஸ் தயாரித்துக்கொள்ளவும். க்ரீம் சீஸ் ரெடிமேடாகக் கிடைக்கும். இல்லாவிட்டால் கீழ்க்காணும் முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.
கெட்டித் தயிர் – 250 கிராம் (சுமார் 2 கப்) இதை ஒரு மெல்லிய துணியில் (பனீர் வடிகட்டுவது போல்) வடிக்கட்டி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, துணியிலிருந்து எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நுரைக்க அடிக்கவும். பின்னர், உப்பு, மிளகுத்தூள், ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய பேரீச்சம்பழம், துருவிய கேரட், ஃப்ரெஷ் க்ரீம் முதலியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு அடிக்கவும். நன்கு கலந்த பின், சாலட் தட்டில் பரப்பவும்.
முதலில் லெட்யூஸ் இலைகளை ஒரு தட்டில் வட்டமாக அடுக்கி அதன் நடுவில் நாம் தயாரித்த க்ரீம் சீஸ் கலவையைக் கொட்டி, மேலே ஆரஞ்சு சுளைகளைப் பரப்பவும். பேரீச்சம்பழம் கொண்டு அலங்கரிக்கவும். துருவிய கேரட் கொண்டு அலங்கரிக்கலாம். நான்கு நாள்கள் வரை கெடாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… அதிமுக – பாமக கூட்டணி! திமுக வைக்கும் திடீர் ட்விஸ்ட்!