விடுமுறை நாளான இன்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் விதத்தில் குறைவான பொருட்களைக் கொண்டு சத்தான, எளிமையாக செய்யக்கூடிய இந்த தேங்காய் வெல்ல லட்டு செய்து கொடுக்கலாம்.
என்ன தேவை?
தேங்காய்த்துருவல் – இரண்டு கப்
பாகு வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – இரண்டு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தேங்காய்த்துருவலை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் லேசாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் அரை டீஸ்பூன் நெய்விட்டு தேங்காய்த்துருவலைச் சேர்த்து கைவிடாமல் வறுக்கவும். தேங்காயில் உள்ள ஈரம் போக வறுத்த பின் தட்டிய வெல்லம் சேர்த்துக் கிளறவும். சில நிமிடங்கள் வெல்லம் இளகி வரும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பின் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு திரண்டு வரும் வரை கிளறி கைகளால் சிறிது கலவையை உருட்டிப் பார்க்கும் போது ஒட்டாமல் வரும்போது ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்கவும். கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துரைமுருகன் திடீர் துபாய் பயணம்… ஏன்?
தீபாவளி கிஃப்ட் ரெடி… அப்டேட் குமாரு