கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ரைஸ் பால்ஸ்

தமிழகம்

அதிகப்படியான எண்ணெய் சேர்த்த சமையல் ஆரோக்கியமற்றது என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் சுவை என வரும்போது ஆரோக்கியம் கொஞ்சம் பின்னுக்குப் போய்விடும். எண்ணெய் தூக்கலாகச் செய்தால்தான் ருசியாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு, எண்ணெய் இல்லாத சிக்கன் ரைஸ் பால்ஸ் ரெசிப்பி இதோ…

என்ன தேவை?
பாஸ்மதி ரவை அரிசி – ஒரு கப்
கோழி இறைச்சி – 2 கப் (எலும்பு நீக்கி, அரைத்தது)
முட்டை வெள்ளைக்கரு – ஒன்று
லைட் சோயா சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (ஒன்றிரண்டாகத் தட்டவும்)
பூண்டு – 2 பல் (தட்டவும்)
நறுக்கிய வெங்காயத்தாள் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரைத்த கோழி, முட்டை வெள்ளைக்கரு, லைட் சோயா சாஸ், சர்க்கரை, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து வைக்கவும்.  கோழி இறைச்சிக் கலவையைச் சரிசமமாக எலுமிச்சை வடிவில் உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஊறவைத்த அரிசியின் மேல் முழுவதுமாக உருட்டி வைக்கவும். பின்னர் இட்லிப் பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, இட்லித் தட்டு வைத்து, இட்லித் துணியை நனைத்து தட்டின் மேல் வைத்து, தட்டில் உருண்டைகளைக் குழிகளில் வைத்து 30 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!

ஊட்டிக்கு போகக் கூட பயமாதான் இருக்கு : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *