chicken fry

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் ஃப்ரை!

தமிழகம்

தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு சத்துக்கள் நிறைந்தது சிக்கன். உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனே தரும் இந்த சிக்கன் ஃப்ரை அனைவருக்கும் ஏற்றது. சாப்பாத்தி, பரோட்டாவுக்கு பெஸ்ட் சைடிஷ்.

என்ன தேவை?

சிக்கன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சிக்கனை நன்கு கழுவி, துண்டுகளாக நறுக்கவும். கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுப் பிசறிக்கொள்ளவும். கடாயைக் காயவைத்து, பிசறிய கலவையைப் போட்டு, நன்கு கிளறவும். கிளறும்போது, தண்ணீர் விட்டுக்கொண்டு வர வேண்டும். அடுப்பை ‘சிம்’மில்வைத்து, கடாயை மூடிவிட்டால், அந்தத் தண்ணீரிலேயே சிக்கன் வேகும். இடையிடையே மூடியைத் திறந்து நன்கு கிளற வேண்டும். சிக்கன் வெந்துவிட்டதா என்பதை, ஒரு துண்டு சிக்கனை எடுத்து அழுத்திப் பார்த்தால் தெரியும். பஞ்சு போல வெந்திருக்கும்போது, நன்கு கிளற வேண்டும். கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு இறக்க வேண்டும்.

குறிப்பு: அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்துத்தான் இதைச் செய்ய வேண்டும் என்பதால், கொஞ்சம் பொறுமையும் கவனமும் தேவை.

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு சிக்கன் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: பட்டர் சிக்கன் மசாலா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *