வாரத்தின் முதல் வேலை நாளன்று காலை நேரத்தில் திட உணவுகளைத் தவிர்க்க நினைப்பவர்கள் இந்த சியா சீட்ஸ் டிரிங்க் அருந்தலாம். பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மை சியா விதைகளுக்கு உண்டு. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதைக் காலை வேளையில் ஒரு மாதம் வரை குடித்துவர, கொழுப்பு குறைந்து உடல் அழகான வடிவமைப்பைப் பெறலாம்.
என்ன தேவை?
சியா விதைகள் – 2 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
தேன் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சியா விதைகளுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அத்துடன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலந்து பருகவும். சியா விதைகளில் உள்ள புரோட்டீன் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் கொழுப்பு தேங்காமல் காக்கிறது. தேனில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேராமலும் காக்கின்றன.
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு தள்ளிப் போகும் துணை முதல்வர் பதவி… துரைமுருகன் காரணமா?