கிச்சன் கீர்த்தனா: கேரட், வெள்ளரி மற்றும் ஹங் தயிர் ரோல்

தமிழகம்

தீபாவளியைத் தொடர்ந்து அரசு விடுமுறை கிடைத்திருக்கும் இந்நாளில் ஹெல்த்தியாக என்ன செய்து சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த  கேரட், வெள்ளரி மற்றும் ஹங் தயிர் ரோல்.

என்ன தேவை?
வெள்ளரிக்காய் – ஒன்று
கேரட் – ஒன்று
ஹங் தயிர் (Hung curd) – அரை கப்
டூத் பிக் (பல்குத்தும் குச்சி) – தேவைக்கேற்ப
உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், புதினா – சிறிதளவு

எப்படிச் செய்வது?
V வடிவில் இருக்கக்கூடிய பீலரில் நீளமான வெள்ளரியை மேலிருந்து கீழாக முழுவதும் மெலிதாக சீவ வேண்டும். இந்த மெல்லிய சீவலை உடனடியாக குளிர்ந்த நீரில் போட்டுக்கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு வெள்ளரி சீவலிலும் ஹங் தயிரை முழுவதுமாக வெண்ணெயைப்போல தடவவும். இதற்குமேல் துருவிய கேரட், உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைத் தூவிவிட்டு, அந்த வெள்ளரி சீவலை ரோலாக உருட்டி கடைசியில் டூத் பிக்கை வைத்து குத்திக்கொள்ளவும். இதில் அழகுக்காக டூத் பிக்கில் புதினாவை செருகி அப்படியே சாப்பிடவும்.

ஹங் தயிர்  செய்வது எப்படி?

தயிரை ஒரு துணியில் ஊற்றி ஃபிரிட்ஜின் ஏதாவது ரேக்கில் கட்டிவிட்டு, தண்ணீர் வடிய கீழே ஒரு பாத்திரத்தை வைத்துவிடவும். தண்ணீர் வடிந்ததும் துணியில் இருக்கும் தயிரே ஹங் தயிர்.
ஹங் தயிர் இல்லாதவர்கள் துருவிய பனீரில் கால் மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து பயன் படுத்தினால் கேரட், வெள்ளரி மற்றும் ஹங் தயிர் ரோல் சுவையாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நெதர்லாந்தை சுருட்டிய இந்திய அணி!

தீபாவளி அட்ராசிட்டி: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *