இந்த வீக் எண்டை புத்துணர்ச்சியைக் கொண்டாட நினைப்பவர்கள் இந்த கலர்ஃபுல் கேரட் பூரி செய்து அசத்தலாம். கோதுமையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் உடல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ பார்வைத் திறனை மேம்படுத்தும். சருமப் பாதுகாப்புக்கு உதவும். பற்கள் உறுதியாக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
கேரட் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேரட்டைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். கோதுமை மாவுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கேரட் விழுது சேர்த்து, பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். மாவை 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பூரிகளாகப் போட்டுப் பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பூரி ரெடி. இதேபோல பீட்ரூட் பூரியும் செய்யலாம்.
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் கார்ன் சப்பாத்தி