கிச்சன் கீர்த்தனா : பீட்ரூட் சட்னி

Published On:

| By christopher

Kitchen Keerthana: Beetroot Chutney

பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உடலை வலுவாக்கி, சருமத்தைப் பொலிவாக்கும். ஆனால், அதன் நிறத்தை வைத்து ஒதுக்குபவர்கள் நம்மில் பலருண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு பீட்ரூட் சட்னி செய்து கொடுத்து அசத்தலாம்.

என்ன தேவை?
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

சட்னிக்கு…
பீட்ரூட் – 2 (தோல் சீவி, நறுக்கவும்)
புளி – சிறிய அளவு

எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் முதலில் குறிப்பிட்டுள்ள எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்த இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

சட்னி செய்ய…
பீட்ரூட்டைச் சிறிதளவு எண்ணெயில் வதக்கவும். இதனுடன் புளி, இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்தால், அருமையான பீட்ரூட் சட்னி தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

இந்திய முட்டைகளுக்கு கத்தார், ஓமன் தடை: நாமக்கல்லை தாக்கும் துருக்கி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel