வாரத்தின் முதல் அலுவலக நாள் இன்று. காலையில் அவசர அவசரமாக என்ன செய்து சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எளிதாகச் செய்யக்கூடிய ஹெல்த்தியான இந்த வாழைப்பழம் – வேர்க்கடலை மில்க்ஷேக் ரெசிப்பி உதவும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும்.
என்ன தேவை?
பச்சை வேர்க்கடலை (தோலுடன்) – 100 கிராம்
பேரீச்சம்பழம் – 3 (கொட்டை நீக்கவும்)
வாழைப்பழம் – 2
தண்ணீர் – 2 கப்
லவங்கப்பட்டைத்தூள் – அரை சிட்டிகை
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை, ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா தோல்வி.. முதன்முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணிபுதுச்சேரி மருத்துவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!