Kitchen Keerthana: Anguri Rasagulla

கிச்சன் கீர்த்தனா : அங்கூரி ரசகுல்லா

தமிழகம்

நினைக்கும்போதே நாவில் நீர் சுரக்கும் இனிப்பு வகை,  ஜூராவில் மிதக்கும் ரசகுல்லா. இந்த கலர்ஃபுல் ரசகுல்லா, இனிப்பு பண்டமே வேண்டாம் என்று ஒதுக்குபவர்களையும் எடுத்து சாப்பிட வைக்கும். நீங்கள் செய்துதான் பாருங்களேன்.

என்ன தேவை?

காய்ச்சாத பால் – அரை லிட்டர்
எலுமிச்சைச்சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றே முக்கால் கப்
சர்க்கரை – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஸ் ஃபுட் கலர் – சில துளிகள்
ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டைக் கட்டித் தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்கவிடவும். இதுவே பனீர்.

இதை அகலமான தட்டில் போட்டு மிருதுவாகும் வரை பிசைந்து, இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்துடன் ரோஸ் ஃபுட் கலர், ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். மற்றொரு பாகத்தை அப்படியே வெள்ளையாக வைக்கவும். இரண்டு நிற பனீரையும் திராட்சைப்பழ அளவு உருண்டைகளாக உருட்டவும்.

மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் ரோஸ் வாட்டர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் உருண்டைகளைப் போட்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்கவும். நடுநடுவே உருண்டைகள் உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறி இறக்கவும். இதைக் குளிரவைத்து, சிறிய கோப்பைகளில் சர்க்கரைப் பாகுடன் சேர்த்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : 19 மாவட்டங்களில் கனமழை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

சை டிஷ்ஷா… மெயின் டிஷ்ஷா? : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0