கிச்சன் கீர்த்தனா: அலுப்புக் குழம்பு

Published On:

| By Selvam

குளிர் காலத்தில் ஏற்படும் உடல் வலி, அசதியைப் போக்கும் இந்த அலுப்புக் குழம்பு, சளித் தொல்லையை நீங்கும். பசியைத் தூண்டும். இந்தக் குழம்பை அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும் ஆற்றலும் கொண்டது.

என்ன தேவை?

சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை – தலா ஒரு துண்டு 

மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி – தலா 10

திப்பிலி – 5

கடுகு, சீரகம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன்

கத்தரிக்காய் – அரை கிலோ

மொச்சை – 100 கிராம்

புளி – சிறிதளவு

வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா… அப்டேட் குமாரு

பாமக 15% உள் ஒதுக்கீடு கேட்டது ஏன் தெரியுமா?: அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share