எளிமையாகச் செய்யக்கூடிய சாட் அயிட்டம் இந்த ஆலு போஹா. இதில் பிரதானமாகப் பயன்படுத்தும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் சி, பொட்டாசியம் சத்துகள் உள்ளன. இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதய நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சுவைக்கலாம். ஆரோக்கியமான சிற்றுண்டியாக இது அமையும்.
என்ன தேவை?
கெட்டி வெள்ளை அவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேக வைத்து சிறிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அவலை ஒரு வடி கூடையில் கொட்டி, கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரை வடிய விடவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஊறிய அவல், வறுத்த வேர்க்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறினால் ஆலூ போகா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முடிவுக்கு வரும் அதிமுக பாஜக பிரேக் அப் : அப்டேட் குமாரு
திருமண சர்ச்சை… சூரியனார் கோயில் மடத்திலிருந்து வெளியேறிய ஆதினம்!