கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்

தமிழகம்

ஆரோக்கியமாக வாழ்வதென்பதே இப்போதைக்கு எல்லோரின் லட்சியமாகவும் மாறிவிட்ட நிலையில், நம் உணவுப்பழக்கத்தை சற்றே மாற்ற வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதன்படி அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசிய உணவுகளின் பட்டியலில் இந்த புளிக் கத்திரிக்காயையும் சேர்த்துக் கொள்ளலாம்.

என்ன தேவை?

நாட்டுக் கத்திரிக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 15
புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கத்திரிக்காயை கம்பியில் செருகி தீயில் நேரடியாக காட்டி எல்லா பக்கமும் வெந்து வருவது போல சுட்டு எடுக்கவும். காய்ந்த மிளகாயையும் தீயில் சுட்டு எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் ஆறியதும் அதன் தோலை நீக்கி நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சுட்ட மிளகாயை நொறுக்கி கத்திரிக்காயில் சேர்க்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து தேவைக்கேற்ப புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும். சுடு சாதத்துக்கு ஏற்ற புளிக்கத்திரிக்காய்க்கு, சுட்ட அப்பளத்தைத் தொட்டுக் கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்

அடுக்கடுக்கான பிரச்சனைகள்… ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *