தினம் தினம் அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் இந்தக் கோடையில் அசைவ உணவுகளைத் தள்ளிவைக்கவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான சரியான மாற்று… இந்த காளான் பெப்பர் மசாலா. சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்றவற்றுக்கு சூப்பர் காம்பினேஷன் இது.
என்ன தேவை?
காளான் – 200 கிராம்
ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 3 (நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு
பட்டை – 4 துண்டு
கிராம்பு – 4
பிரியாணி இலை – 2
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை, சோம்புத்தூள், நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், காளான், குடமிளகாய், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் சிறுதீயில் எண்ணெயிலேயே வறுத்து எடுக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித்தழை தூவவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் எப்போது?