இன்னும் 10 நாட்களில் தீபாவளி பண்டிகை. இந்தத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய பட்சணங்களை சத்துமிக்க சிறுதானியங்களில் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கவுனி அரிசி மாவு – ஒரு கப்
சர்க்கரை இல்லாத கோவா – அரை கப்
கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – கால் கப்
வெல்லம் – ஒரு கப்
முந்திரி, திராட்சை, பாதாம் – தேவைக்கேற்ப
பால் – 4 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியைவைத்து கொஞ்சம் நெய்விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்தெடுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் கவுனி அரிசி மாவு, கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு, வடிகட்டி தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வறுத்த கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, பால், வெல்லக்கரைசல், சர்க்கரை சேர்க்காத கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். இடையிடையே நெய்விட்டு கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கி முந்திரி, திராட்சை, பாதாம் தூவி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எனக்கே கூட இல்லாமல் போகலாம்- பொன்முடி பேச்சின் பின்னணி இதுதான்!
என்னம்மா யோசிக்கிறாங்க: அப்டேட் குமாரு