டிரை ஃப்ரூட் பயன்பாடு இன்று அதிகரித்து வருகிறது. அதை அப்படியே சுவைப்பது ஒருபுறம் இருக்க… இந்த கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் குழந்தைகளை குஷிபடுத்த சுவையான சிக்கியாகச் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
வறுத்த வெள்ளை எள் – கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாகத் தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த ஊருக்கு ஏன் போகல? – அப்டேட் குமாரு