சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்துவரும் நிலையில் எளிதான முறையில் இந்தக் கஞ்சி செய்து வீட்டிலுள்ளவர்களுக்குச் சூடாகப் பரிமாறுங்கள். சுவை மிகுந்த சத்தான கஞ்சி, அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
என்ன தேவை?
கரும்புச்சாறு – ஒரு டம்ளர்
தினை, கம்பு, வரகு, ராகி, சாமை – தலா 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தானியங்களை (வாணலியில் எண்ணெய் ஊற்றாமல்) வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வறுத்தவற்றை கொதி நீரில் போட்டு குக்கரில் வைத்து வேக விடவும். வெந்தவற்றை எடுத்து, மத்து அல்லது கரண்டியினால் நன்றாக மசித்து, கரும்புச்சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். விரும்பினால் ஏலக்காய்த்தூள், தூள் செய்யப்பட்ட பாதாம் பருப்பைப் போட்டு கலக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!
ப்ரோ என் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு