Butter Chicken Masala

கிச்சன் கீர்த்தனா: பட்டர் சிக்கன் மசாலா

தமிழகம்

அசைவ ப்ரியர்களால் விரும்பப்படும் சிக்கனில் அதிக புரதம் இருப்பதால் சுறுசுறுப்பாகவும், நல்ல சத்துடனும் இயங்க உதவும். இதில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகப் புரதம் தேவைப்படுவதால், இந்த பட்டர் சிக்கன் மசாலா செய்து சுவைக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

எலும்பு இல்லாத சிக்கன் – 400 கிராம்,
கொத்தமல்லித்தூள், கரம் மசாலா – தலா 50 கிராம்,
நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி – தலா 150 கிராம்,
இஞ்சி, மஞ்சள் பொடி – தலா 40 கிராம்,
வெந்தயக் கீரை – 50 கிராம்,
பெருஞ்சீரகம் – 100 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் – 100 மில்லி,
வெண்ணெய் – 50 மில்லி,
எண்ணெய் – 50 மில்லி,
காஷ்மீர் மிளகாய்ப் பொடி – 75 கிராம்,
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 75 கிராம்,
முந்திரி – 100 கிராம், தேன் – 10 மில்லி.
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தக்காளியை வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, தோலை உரித்து அரைத்து எடுக்கவும். முந்திரியை வெந்நீரில் மூன்று மணி நேரங்கள் ஊறவைத்து, அரைத்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயைவைத்து, அதில் வெண்ணெயை ஊற்றி, சிக்கனைச் சேர்க்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத் தூள், மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்துவைத்த தக்காளியை சேர்க்கவும்.

கடாயின் ஓரத்தில், கிரேவி ஒட்டிக்கொள்ளாமல் வரும் வரை கொதிக்கவிடவும். அடுப்பை ‘சிம்’மில்வைத்து முந்திரி பேஸ்ட்டைச் சேர்த்து, நன்கு கலக்கவும். தேன், கால் கப் தண்ணீர் ஊற்றி கிரேவியையும், சிக்கன் துண்டுகளையும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். கிரீம், கரம் மசாலா, பெருஞ்சீரகம், வெந்தயக் கீரை சேர்த்துக் கலக்கி, அடுப்பை அணைத்துவிடவும். இஞ்சித் துண்டுகள், கிரீம், உருகிய வெண்ணெய் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

மராத்தா இட ஒதுக்கீடு… போராட்டத்தில் வெடித்த கலவரம்: மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்

வண்டலூர் பூங்கா கட்டணம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *