வைட்டமின் ஏ, கே, பி1, பி2, பி6, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற பல்வேறு சத்துக்களை தன்னகத்துள் கொண்டுள்ளது கேரட். தினமும் சிறிதளவு கேரட்டை எடுத்துக் கொண்டால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம் என்கிறது மருத்துவம். அப்படிப்பட்ட கேரட்டில் அவியல் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு – ஒன்று
கேரட் – 3
பீன்ஸ் – 50 கிராம்
பச்சைப்பட்டாணி (உரித்தது) – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 3
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளிக்காத தயிர் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
தோல் சீவி சுத்தம் செய்த கேரட் மற்றும் உருளைக்கிழங்குடன் நீளவாக்கில் துண்டு துண்டுகளாகச் செய்துகொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதே போல் பீன்ஸை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நறுக்கிய காய்கள் மற்றும் பட்டாணியைச் சேர்த்து வேக விடவும். வெந்த காய்கறிகளுடன் உப்பு, அரைத்து வைத்தத் தேங்காய் விழுதைச் சேர்த்து புரட்டவும். சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவியல் கெட்டியாக இருக்க வேண்டும். காய்கள் வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலையைத் தூவி தேங்காய் எண்ணெயை ஊற்றவும். சூடு ஆறியவுடன் தயிர் சேர்த்துப் புரட்டவும்.
மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசின் புதிய திட்டம்!
மேட்டூர் அணையில் ஆய்வு நடத்திய மத்திய படையினர்: காரணம் என்ன?