காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்: நீதிமன்றத்தில் ஆஜர்!

தென்காசியில் காதல் திருமணம் செய்ததால் பெற்றோரால் கடத்தப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்தார். பின்னர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

கொட்டாகுளம் பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பட்டேல் வசித்து வருகிறார். இவர் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் வினித்தும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு மறுப்பு தெரித்துள்ளனர்.

இதனால் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

kiruthika kidnaped in love marriage appears in court

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், பெண் வீட்டார் தகராறில் ஈடுபட்டனர். இத குறித்து குற்றாலம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது பெண் வீட்டார் வழிமறித்து கிருத்திகாவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி வைரலானது.

கிருத்திகா கடத்தல் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் திடீர் திருப்பமாக கிருத்திகா, தனக்கு மைத்திரிக் பட்டேல் என்பவருடன் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திருமணம் நடந்ததாகவும், வினித் தன்னை ஆசை வார்த்தை கூறி மயக்கி திருமணம் செய்து கொண்டு கொண்டார்.

என் பெற்றோர் என்னைக் கடத்தியதாக வினித் தவறாகப் புகார் அளித்துள்ளார் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த வினித், கிருத்திகா தன்னை முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும்,

அவரது பெற்றோர் மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்ததாகவும், மிரட்டியே கிருத்திகாவை வீடியோ பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று வினித், பதிவு திருமணம் செய்த ஆவணங்களைக் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கிருத்திகாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கிருத்திகாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தாங்களே கிருத்திகாவை நேரில் அழைத்து வந்து ஆஜர் படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று (பிப்ரவரி 7) கிருத்திகா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜார் ஆகியுள்ளார்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.

மோனிஷா

குடிமைப்பணித் தேர்வு வயது வரம்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

காவல்துறை பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts