ஆளுநரின் செயலாளராக இருந்த ஆனந்த பாட்டீல் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பதவிக்கு கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக இருந்த ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஆளுநரின் செயலாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஆளுநரின் புதிய செயலாளர் பதவிக்கான நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு சார்பில் மாநில தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா இன்று (அக்டோபர் 2) பிறப்பித்துள்ளார்.
சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக இருந்த கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ் தற்போது ஆளுநரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இருந்த டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ் தற்போது சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாரிமுத்துவுக்கு பதில் இவர்தான்… உறுதி செய்த எதிர்நீச்சல் டீம்!