கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் எம்.பி.சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகை கடை இயங்கி வருகிறது. இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கிருஷ்ணகிரியில் இருக்கக் கூடிய அனைத்து வணிகர் சங்கத்தின் நகர தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் எம்.பி.சுரேஷ் இன்று (அக்டோபர் 13) அதிகாலை தனது அறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் எம்.பி.சுரேஷின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரியில் உள்ள வணிகர் சங்க கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னையில் நவராத்திரி கொண்டாட்டம்: அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!
வக்பு வாரியத்தில் ரூ.2000 கோடி ஊழலா? – அப்துல் ரகுமான் விளக்கம்!