கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் : என்னென்ன வசதிகள் உள்ளன?

Published On:

| By christopher

kilambakkam Bus Station facilities

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், சென்னை ஜி.எஸ்.டி.சாலை மற்றும் கோயம்பேட்டில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையிலும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்து பார்வையிட்டார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயன் பெறுவர்.

பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெளியூர், மாநகர பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளும் செல்ல வசதி செய்யப்பட்டது. அதன்படி இங்கு ஒரே நேரத்தில் 200 பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்!

பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, மருந்தகம், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.

4 பெரிய உணவகங்கள், 100 கடைகள், செல்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

4 சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் 12 இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வசதி, 540 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக 2 கீழ் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களும்,  2வது தளத்தில் 84 கார்கள் மற்று 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

சிசிடிவி கேமராக்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் தங்குவதற்கு நவீன ஓய்வு அறை, முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எஸ்கலேட்டர் வசதியும்,  அதிக பாரத்தை கொண்டு செல்ல 6 மின்தூக்கிகளும் (Lift) அமைக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் முதலில் SETC மற்றும் ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும். அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்.

நகர்புற பேருந்து வழித்தடங்கள்!

கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் நகர்ப்புற பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

கிளாம்பாக்கம்-கோயம்பேடு

கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 70V, 70C, 104CCT பேருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-தாம்பரம்

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்

கிளாம்பாக்கம்-வேளச்சேரி

கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 91R எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-கிண்டி

கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்

கிளாம்பாக்கம்-திருவான்மியூர்

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 91, 95, 91k, 95k எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-அடையாறு

கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 99X எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-பூந்தமல்லி

கிளாம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி இடையே 66P எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-பூந்தமல்லி

கிளாம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி இடையே 66P எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்- ஐயப்பன்தாங்கல்

கிளாம்பாக்கத்தில் இருந்து ஐயப்பன்தாங்கல் இடையே 166X எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-பிராட்வே

கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 18A, 21G எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-தி.நகர்

கிளாம்பாக்கத்தில் இருந்து தி.நகர் இடையே 51A, 51AX, V51X எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்

விஜயகாந்தின் தவசி படத்திற்கு சீமான் வசனம் எழுதினாரா?… இயக்குநர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment