கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வருக்கு ஆம்னி பேருந்து சங்கம் கடிதம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் பேருந்துகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் என்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்கள், 80 பஸ் பே, 150 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்பு கூடம், 22 கடைகள் உள்ளன.

இங்கு தென் தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்ளிட்ட 270 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் வார நாட்களில் 850 பேருந்துகளும் வார இறுதி மற்றும் விழா காலங்களில் 1450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கிளாம்பாக்கத்தில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தில் 62 பஸ் பே, 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. எனவே திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ஓசியில் பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு : 4 போலீஸார் இடைநீக்கம்!

’வீரன்’ – விமர்சனம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts